இரண்டு நாட்களில் 12 பேரை காணவில்லை:பொலிஸ் தலைமையகம் தகவல்
கடந்த இரண்டு நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் இருந்து நான்கு சிறுவர்கள் உட்பட 12 பேர் காணாமல்போயுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, பொரலஸ்கமுவ வெரஹெர பிரதேசத்தில் வசிக்கும் 15 வயது மாணவன், தர்மபுரம் பகுதியில் வசிக்கும் 16 வயது மாணவன், ஹட்டன் பொல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 16 வயதுடைய ஒரு மாணவி மற்றும் பதினைந்து வயதுடைய சிறுமி ஆகியோர் காணாமல்போன சிறார்களில் அடங்குவர்.
காணாமல்போனவர்களில் நுவரெலியாவைச் சேர்ந்த 18 வயது யுவதியும், பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண்ணும், எடரமுல்லைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரும் அடங்குகின்றனர்.

பொலிஸ் தலைமையக தகவல்
மேலும், நோர்வூட்டை சேர்ந்த 82 வயதான பெண், மொரட்டுவையை சேர்ந்த 75 வயதுடைய ஆண், பள்ளம பிரதேசத்தை சேர்ந்த 70 வயதான கூலித்தொழிலாளி மற்றும் கஹதுடுவ பிரதேசத்தில் வசிக்கும் 65 வயதுடைய ஆண் ஆகியோர் அடங்குகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam