கிழக்கு பல்கலைக்கழகத்தை 3 நாட்களாக சோதனை செய்த சிஐடி
கிழக்கு பல்கலைக்கழகத்தில் சிஐடியினர் (CID) தொடர்ந்து 3 நாட்களாக 2004ஆம் ஆண்டு தொடக்கம் உள்ள ஆவணங்களை சோதனையிட்டு விசாரணைகளை கடந்த வாரம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2006 டிசம்பர் 15ஆம் திகதி உபவேந்தர் எஸ்.ரவீந்திரநாத் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வாகனத்தில் பிரயாணித்த நிலையில் அவர் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் போயிருந்தார்.
விரிவுரையாளர்களின் ஆவணங்களை சோதனை
இந்த சம்பவம் தொடர்பாக பிள்ளையான் என்றழைக்கப்படும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தனை கடந்த 8ஆம் திகதி அவரது கட்சி காரியாலயத்தில் வைத்து சிஐடி யினர் கைது செய்தனர்

இதனையடுத்து குறித்த பல்கலைக்கழகத்தில் கடந்த வாரம் 23,24,25 ஆகிய மூன்று தினங்களாக கொழும்பில் இருந்து வந்த சிஐடி யினர் 2004ஆம் ஆண்டு தொடக்கம் உள்ள ஆவணங்கள் மற்றும் ஒரு சில விரிவுரையாளர்களின் ஆவணங்களை சோதனை செய்துள்ளதுடன் விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளதக அவர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam