யாழில் அரச வங்கி ஒன்றின் முன்னாள் முகாமையாளர் கைது
யாழ்ப்பாணத்தில் அரச வங்கி ஒன்றின் முன்னாள் முகாமையாளர் ஒருவர், பெருந்தொகை பணமோசடியில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நடவடிக்கை, யாழ்ப்பாணம் (Jaffna) மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவால் நேற்று (28) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பண மோசடி
வங்கியில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாகத் தெரிவித்து 15 இலட்சம் ரூபாவை ஒருவரிடம் இருந்து மோசடி செய்ததாக யாழ்ப்பாணம் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினரிடம் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டைத் தொடர்ந்தே அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தான் பெற்றுக்கொண்ட பணத்துக்காக சந்தேகநபர் காசோலை வழங்கிய போதிலும், குறித்த காசோலை திரும்பியதைத் தொடர்ந்தே அவர் மீதான முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சந்தேகநபர் தலைமறைவாக இருந்த நிலையிலேயே தற்போது கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Optical illusion: படத்தில் '44' மற்றும் '33' என்ற மாறுபட்ட இலக்கங்களில் '88' எங்கே மறைந்துள்ளது? Manithan

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
