எழுத்தாளர் தீபச்செல்வனிடம் பயங்கரவாத விசாரணை
எழுத்தாளர் தீபச்செல்வனை பயங்கரவாத விசாரணை பிரிவினர் இன்று(11) விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
ஈழத்தின் மூத்த எழுத்தாளர் நா. யோகேந்திரநாதனின் நாவல் வெளியீட்டு நிகழ்வை நடாத்தியமைக்காகவே இவ்வாறு விசாரணை இடம்பெற்றுள்ளது.
புத்தகத்தின் வெளியீடு
இதன்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள உருவாக்கும் நோக்கில் புத்தகம் எழுதப்பட்டதா என்றும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த புத்தகத்தின் வெளியீட்டு விழாவை நீங்கள் ஏன் நடத்தீனர்கள் என்றும் விசாரணையின் போது கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதற்கு, கிளிநொச்சியின் மூத்த எழுத்தளார் நா. யோகேந்திரநாதனை மதிப்பளிப்பு செய்யும் நோக்கிலேயே வெளியீட்டு விழாவை நடாத்தியதாக கூறியுள்ளார்.
மேலும் இன்று(11) காலை 11மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட விசாரணை சுமார் இரண்டறை மணிநேரத்திற்கும் மேலாக இடம்பெற்றதாக தீபச்செல்வன் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |