கைது செய்யப்பட்ட மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு விளக்கமறியல்
புதிய இணைப்பு
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஆயர் ஜெரோம் பெர்னாண்டோ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 13ஆம் திகதி வரை இவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
பௌத்த மதம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டார் என குற்றம் சுமத்தப்பட்ட மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு பிரிவினரால் இன்று(01.12.2023) காலை அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவு
அவரது சர்ச்சைக்குரிய பிரசங்கம் தொடர்பில் நேற்றையதினம் (01.12.2023) 8 மணி நேரம் விளக்கமளித்த ஜெரோம் பெர்னாண்டோ, இன்று மேலதிகமாக விளக்கமளிப்பதற்காக குற்றப்புலனாய்வு பிரிவிற்கு வருகைதந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெரோமை கைது செய்ய வேண்டாம் என நீதிமன்றம் உத்தரவு வழங்கிய பின்னர் அவர் புதன்கிழமை (01.12.2023) காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அவர் பௌத்தம், இஸ்லாம் மற்றும் இந்து மதத்துக்கு எதிரான கருத்துக்களை கூறியமையால் குற்றப்புலனாய்வு பிரிவு அவரை விசாரணைக்கு உட்படுத்தியிருந்த வேளையில் மே மாதம் 15ஆம் திகதி அவர் நாட்டை விட்டு வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam