இனியபாரதியின் இருசகாக்கள் கைது..!
இனியபாரதியின் சகாவான டிலக்சனை கல்முனையில் வைத்து நேற்றையதினம்(30) சிஜடியினர் கைது செய்துள்ளனர்.
வெளிநாடு தப்பி ஓடமுயற்சித்த காரைதீவைச் சேர்ந்த இன்னொரு சகாவான வன்னியசிங்கம் பரமேஸ்வரனை கட்டுநாயக்கா விமான நிலையத்ததில் கடந்த இருவாரங்களுக்கு முன்னர் கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சிஜடியினர் கைது
ரி.எம்.வி.பி கட்சியைச் சேர்ந்த இனியபாரதி மற்றும் அவரது சகாவான சசீந்திரன் தவசீலன் ஆகியோரை 2007-6-28 ம் திகதி திருக்கோவில் பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் படுகொலை தொடர்பாக படுகொலை செய்யப்பட்டவரின் மனைவி சிஜடியிடம் முறைப்பாடு செய்திருந்தார்.
இதனையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் கடந்த ஜூலை 6ஆம் திகதி திருக்கோவில் வைத்து இனியபாரதியையும் அவரது சகாவான மட்டு சந்திவெளியைச் சேர்ந்த சசிதரன் தவசீலன் என்பவரை சந்திவெளியில் வைத்து சிஜடியினர் கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்ட இனியபாரதியிடம் மேற்கொண்ட விசாரணையில் அடிப்படையில் அவரின் சகாவான கல்முனையைச் சேர்ந்த டிலக்சன் என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் சிஜடியினர் கைது செய்து கொழும்புக்கு கொண்டு சென்றுள்ளனர்.
விசாரணை
அதேவேளை இனியபாதியின் இன்னொரு சகாவான வவுணதீவு பாவக்கொடிச் சேனையைச் சேர்ந்தவரும் காரைதீவில் திருமணம் முடித்து வாழ்ந்துவரும் வன்னியசிங்கம் பரமேஸ்வரன் வெளிநாட்டுக்கு தப்பி செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற நிலையில் அங்குவைத்து கடந்த 12ம் திகதி சிஜடியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணைக்காக சிஜடியினர் கொழும்பிற்கு கொண்டு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 10 மணி நேரம் முன்

சிறகடிக்க ஆசை வெற்றி வசந்த் மனைவிக்கு என்ன ஆச்சு.. கதறி அழும் பொன்னி சீரியல் வைஷ்ணவி.. வைரல் வீடியோ Cineulagam

30 லட்சம் இழப்பீடு பெற்ற செவிலியர்! பிரித்தானியாவில் கண்ணசைவுகளால் துன்புறுத்திய சக பெண் ஊழியர்! News Lankasri

திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞரை அடித்துக் கொன்ற காதலி குடும்பம்! POCSO வழக்கில் காதலன் News Lankasri
