அவுஸ்திரேலியாவில் மற்றுமொரு பயங்கரம் : தேவாலயத்தில் பலர் மீது தாக்குதல்
அவுஸ்திரேலியா சிட்னியின் புறநகர் வேக்லியில் உள்ள தேவாலயத்திற்குள் பாதிரியார் உட்பட நால்வர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, 4 பேர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் தாக்குதல்தாரி கைது செய்யப்பட்டுள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் காயமடைந்தவர்கள் அவசர சேவைகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 50 மற்றும் 30 வயதுடைய இருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் மேலும் இருவர் சம்பவ இடத்தில் சிகிச்சை பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

திடீர் தாக்குதல்
இந்த கொடூர தாக்குதலின் காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளன.
ஆலயத்தில் பாதிரியார் உரையாற்றிக்கொண்டிருக்கையில், முன்பாக சென்ற கறுப்பு நிற உடையணிந்த ஒருவர் அவரை பலமுறை கத்தியால் தாக்கியுள்ளார்.
முன்னதாக, கடந்த சனிக்கிழமையன்றும், சிட்னியின் வெஸ்ட்ஃபீல்ட் போண்டி சந்திப்பு வளாகத்தில், மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்து சம்பவத்தில் ஆறு பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    சீனாவில் இருந்து அரிய பூமி கனிமங்களை இறக்குமதி செய்ய உரிமம் பெற்றுள்ள இந்திய நிறுவனங்கள் News Lankasri
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        