ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடுவில் சிறப்பாக இடம்பெற்ற புனித செபஸ்தியார் ஆலய திருவிழா.....!
புல்லாவெளி புனித செபஸ்தியார் திருத்தலத்தின் ஆடிமாத திருவிழா இன்று (06.07.2025) ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடுவில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது
யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பங்கின் வரலாற்று சிறப்புமிக்க புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலய திருவிழா இன்று காலை 6 மணியளவில் திருச்செபமாலையுடன் 7மணியளவில் திருவிழா திருப்பலி ஆரம்பமானது.
திருவிழா திருப்பலி
திருவிழா திருப்பலியானது கட்டைக்காட்டு பங்குத்தந்தை அமல்ராஜ் தலைமையில் ஆரம்பமாகி அருட்தந்தை ஜெபரன்சன் மற்றும் அருட்தந்தை யாவிஸ் மற்றும் அருட்தந்தை அலவன்ராஜ சிங்கன் அமலமரித்தியாகிகள் மற்றும் அருட்தந்தை றொகானால் கூட்டுத் திருப்பலியாக திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டடது.
திருவிழா திருப்பலியை தொடர்ந்து புனித செபஸ்தியாரின் திருச்சொரூப பாவனியும் அதனை தொடர்ந்து செபஸ்தியாரின் ஆசீர்வாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
திருவிழா திருப்பலியில் அருட் தந்தையர்கள், அருட்சகோதரிகள் மற்றும் இலங்கை முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.




திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! Manithan

இந்திய விமானப்படைத் திறனை அதிகரிக்க மாற்று திட்டம்., F-35, Su-57E போர் விமானங்களை தவிர்க்க வாய்ப்பு News Lankasri
