இலங்கை அரசியல்வாதிகள் சேர்த்து வைத்துள்ள புதையல்கள்(Video)
எதிர்வரும் இரண்டு தினங்களில் உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் தேவ பாலகன் பிறப்பினை கோலாகலமாக கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர்.
தலைநகர் கொழும்பை பொறுத்தவரை கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திற்கான பொருட்கொள்வனவில் மக்கள் ஆர்வமாக ஈடுபடுவதை காண முடிகின்றது.
எனினும், பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக ஓரளவு மந்த கதியில் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதையும் காணக்கூடியதாக உள்ளது.
இந்தநிலையில், இலங்கையில் உள்ள அரசியல்வாதிகள் பலரும் புதையல்களை சேர்த்து வைத்துள்ளதாகவும், பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் சாதாரண மக்கள் தங்களது அன்றாடத் தேவைகளையே பூர்த்தி செய்து கொள்ள முடியாத இக்கட்டான தருணங்களில் இந்த கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடுவதாக பொதுமகன் ஒருவர் லங்காசிறியிடம் பகிர்ந்து கொண்டார்.
இந்தநிலையில், கொழும்பில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள், அது தொடர்பான ஆயத்தங்கள் மற்றும் மக்களது இன்னல்கள் தொடர்பான பதிவுகளை உள்ளடக்கி வருகின்றது இந்த காணொளி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |