சிப் விநியோகத் தட்டுப்பாடு: பிரட்கொம் நிறுவனத்தின் எச்சரிக்கை
உலகின் முன்னணி செமிகண்டக்டர் நிறுவனமான பிரட்கொம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கான சிப்களின் தேவை அதிகரித்து வரும் நிலையில், விநியோகச் சங்கிலியில் கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, உலகின் மிகப்பெரிய ஒப்பந்த சிப் தயாரிப்பு நிறுவனமான டி.எஸ்.எம்.சியின் உற்பத்தித் திறனில் ஏற்பட்டுள்ள "பொட்டில்நெக்" எனப்படும் இடர்ப்பாடுகளே இதற்குக் காரணம் என்று பிரட்கொம் சுட்டிக்காட்டியுள்ளது.
கூகுள் மற்றும் மெட்டா போன்ற பெரிய நிறுவனங்கள் தங்களின் ஏஐ உள்கட்டமைப்பை மேம்படுத்த அதிகப்படியான சிப்களைக் கோருவதால், தற்போதைய உற்பத்தித் திறனால் அந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய இயலவில்லை.
விநியோகத் தட்டுப்பாடு
இந்த விநியோகத் தட்டுப்பாடு காரணமாக, 2026ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் வருவாய் வளர்ச்சி சற்றே பாதிக்கப்படலாம் என பிரட்கொம் முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

டி.எஸ்.எம்.சி நிறுவனம் தனது மேம்பட்ட பெக்கேஜிங் தொழில்நுட்பத் திறனை அதிகரிக்க முயற்சி செய்து வந்தாலும், அதற்கு இன்னும் சில காலம் எடுக்கும் எனத் தெரிகிறது.
இந்தச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, பிரட்கொம் நிறுவனத்தின் பங்குகள் வர்த்தகத்தில் சரிவைக் கண்டன. ஏஐ துறையில் ஏற்பட்டுள்ள இந்த அதீத வளர்ச்சி, செமிகண்டக்டர் துறையில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளைத் தாண்டிச் செல்வதை இது காட்டுவதாகப் பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri
பாக்கியலட்சுமி சீரியல் ஜோடி நடிக்கும் புதிய சீரியலில் இணைந்த பிரபல நடிகர்... இவர்தான் ஹீரோவா? Cineulagam