இலங்கையை வந்தடைந்த சீனாவின் போர் பயிற்சி கப்பல்
சீன (China) மக்கள் விடுதலை இராணுவ கடற்படையின் பாய்மரப் பயிற்சிப் போர்க்கப்பலான ‘போ லாங்’ இன்று (08) முறைப்படி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
"PO LANG” என்ற கப்பல், 35 அதிகாரிகள் உட்பட்ட 130 பணியாளர்களைக் கொண்ட, 86 மீட்டர் நீளமுள்ள பயிற்சிக் கப்பலாகும் என்று இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்படை
இந்த கப்பலின் பணியாளர்கள் கொழும்பில் தங்கியிருக்கும் போது, நாட்டின் சில சுற்றுலாத் தலங்களுக்கு செல்வார்கள்.
அத்துடன், இலங்கை கடற்படை வீரர்களுக்கு, குறித்த கப்பலின் செயற்பாடுகள் பற்றிய விளக்கக்காட்சிகளில் பங்கேற்கவும் வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
அதேவேளை, உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு, ‘PO LANG’ ஒக்டோபர் 11ஆம் திகதி இலங்கையை விட்டுப் புறப்படும் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 2 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam
