உரிய வசதிகள் இன்மையால் பூநகரி கடற்றொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமம்
கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் உள்ள கரையோர பகுதிகளில் உரிய இறங்குதுறை வசதிகளின்மையால் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதுடன் கடற்றொழில் உபகரணங்களும் பாதிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சியில் கடற்றொழிலாளர்கள் அதிகம் வாழும் பிரதேசமாக பூநகரி பிரதேசம் காணப்படுகின்றது.
குறிப்பாக பூநகரி பிரதேசத்தின் இரணை மாதா நகர், நாச்சிகுடா, இலவன்குடா, பள்ளிக்குடா மற்றும் கௌதாரி முனை போன்ற கரையோரப் பகுதிகளில் இறங்குதுறைகள் இன்மையால் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
புரவி புயல்
அதாவது, குறித்த பிரதேசத்தில் கடற்றொழிலுக்கு பயன்படுத்தும் படகுகளை பாதுகாப்பதிலும் கடற்றொழில் உபகரணங்களை பாதுகாப்பதிலும் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக அவர்கள் கூறியுள்ளனர்.
அதாவது இறங்குதுறை வசதியின்மையால் பாதுகாப்பான முறையில் படகுகளையும் கடற்றொழில் உணர்வையும் பாதுகாக்க முடியாது இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஏற்பட்ட புரவி புயல் காரணமாகவும் பெரும் பாதிப்பை எதிர்கொண்டதாகவும் கடற்றொழிலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
எனவே, தங்களுடைய பிரதேசத்தின் கடற்றொழில் இறங்கு துறைகளை புனரமைத்துத் தருமாறும் கடற்றொழிலுக்கான வீதிகளை அமைத்துத் தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 42 நிமிடங்கள் முன்

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan
