அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு சீனா விடுத்துள்ள எச்சரிக்கை
தைவான் ஜலசந்திக்குப் போர்க் கப்பல்களை அனுப்பிய அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சீன ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தைவான் சீனப் பிரதேசத்தின் ஒரு பகுதி. சமீபத்தில் தைவான் ஜலசந்திக்கு அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் போர்க் கப்பல்களை வழங்கியுள்ளன. இந்த பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத் தன்மைக்கு அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் அச்சுறுத்தல் விடுத்துள்ளன” என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கடந்த 1949-ல் நடந்த உள்நாட்டுப் போருக்குப் பிறகு தைவான் உருவானது. இதில் தைவான், சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என சீன அரசு கூறி வருகிறது.
எனினும், தைவான் தனி நாடு என்றும், சுயாதீனமான நாடு என்றும் தெரிவித்து வருகின்றது. இந்த நிலையில் அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான அா்லீக் பியூா்க் ரகத்தைச் சோ்ந்த யுஎஸ்எஸ் டேவே போா்க் கப்பல் சீனாவுக்கும் தைவானுக்கும் இடையிலான தைவான் நீரிணைப் பகுதியில் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் செலுத்தப்பட்டது.
கனடா கடற்படைக்குச் சொந்தமான ஹெச்எம்சிஎஸ் வின்னிபெக் போா்க் கப்பலும் யுஎஸ்எஸ் டேவேயுடன் இணைந்து ரோந்துப் பணியை மேற்கொண்டது. எனினும் சீனாவின் இந்த எச்சரிக்கைக்கு அமெரிக்கா, கனடா ஆகிய இரு நாடுகள் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
