இலங்கையில் இருந்து சீனா சென்றவருக்கு கொவிட் தொற்று
இலங்கையில் இருந்து சென்ற சீன பிரஜை ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, ஷங்காய் சுகாதார ஆணையம் இன்று தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து கொவிட்டு தொற்றுடன் சீனா சென்ற 8 பேரில் ஒருவர் இலங்கையை சேர்ந்தவர் என சீனா குறிப்பிட்டுள்ளது.
கொவிட் தொற்று
“முதல் நோயாளி இலங்கையிலிருந்து கடந்த 10 ஆம் திகதி ஷங்காய் புடோங் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த சீனர்” என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏனையவர்கள் நியூசிலாந்து, அமெரிக்கா, தென் கொரியா மற்றும் கனடாவில் இருந்து சீனாவுக்கு சென்றுள்ளனர்.
தனிமைப்படுத்தல்
அனைத்து நோயாளிகளும் சிகிச்சைக்காக உரிய மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதேவேளை, அவர்களுடன் அதே விமானங்களில் நெருங்கிய தொடர்பு கொண்ட 32 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.