சீன உளவுக் கப்பலும்.. ஆபரேஷன் காட்டுப்பூனையும்!
இலங்கைக்கு வந்து ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் தரித்துநின்ற சீனாவின் உளவுக் கப்பல் Yuan Wang-5 பற்றிய சர்ச்சைகள் தொடந்தவண்ணம்தான் இருக்கின்றது.
சீனாவின் அந்த உளவுக் கப்பலால் இந்தியாவின் தொலைத்தொடர்புப் பரிவர்த்தனைகளை ஒட்டுக்கேட்க முடியும் என்றும், தொலைதூர ஏவுகணைகளை இடைமறிப்பதற்கு அல்லது வழிநடத்துவதற்கு அந்தக் கப்பலிலுள்ள தொழில்நுட்பத்தால் முடியும் என்றும் கூறப்பட்டு, சீனாவின் அந்தக் கப்பல் இலங்கையில் தரித்துநிற்பதை இந்தியா மிகக்கடுமையாக எதிர்த்தது.
பிராந்திய அரசியலில் மிகப்பெரிய பிரளயத்தை ஏற்படுத்திவிட்டுள்ள சீனாவின் அந்த உளவுக்கப்பல் பற்றி வெளியாகிவருகின்ற மேலும் சில ஆச்சரியான தகவல்கள் பற்றிப் பார்க்கின்றது இந்த 'உண்மையின் தரிசனம்' ஒளியாவணம்:





எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜீவானந்தம் உயிருடன் இருப்பதை அறியும் ஆதி குணசேகரன்! கொலை செய்ய வரும் அடியாட்கள் Cineulagam
