இரகசியத்தை வெளியிட்ட சீன உளவாளிக்கு அமெரிக்க நீதிமன்றம் வழங்கியுள்ள கடுமையான உத்தரவு

United States of America Government of China China
By Chandramathi Nov 18, 2022 12:04 AM GMT
Report

இரகசிய தகவல்களை வெளியிட்டதாக குற்றம்சாட்டப்பட்ட சீன உளவாளிக்கு அமெரிக்க நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டிருக்கிறது.

உலகின் முன்னணி விமான எஞ்சின் உற்பத்தியாளர்களில் ஒன்றான GE Aviation மற்றும் என்ஜின் மேம்பாட்டில் GE உடன் இணைந்து பணியாற்றிய பிரான்சின் Safran குழுமத்தின் வணிக ரகசியங்களை திருடியதாக சூ யான்ஜுன்(42 வயது) என்பவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

திருடப்பட்ட இரகசியங்கள்

இரகசியத்தை வெளியிட்ட சீன உளவாளிக்கு அமெரிக்க நீதிமன்றம் வழங்கியுள்ள கடுமையான உத்தரவு | Chinese Spy Jailed In Us Trade Secrets

சீனாவின் மாநில பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உளவுத்துறை அதிகாரியாக பணியாற்றியவர் என அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBI நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அவர் கடந்த 2018 ஆம் ஆண்டு பெல்ஜியத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். பின்னர் நாடு கடத்தப்பட்ட சூ யான்ஜுன், ஒஹியோவின் சின்சினாட்டியில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது அவருடன் இரண்டு FBI அதிகாரிகள் உட்பட 11 பேர் மீது உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு தொடர்பில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பரில் பொருளாதார உளவு முயற்சி, வர்த்தக இரகசிய திருட்டு முயற்சி மற்றும் இரண்டு சதி குற்றச்சாட்டுகள் ஆகியவை சூ யான்ஜுன் மீது சுமத்தப்பட்டுள்ளன.

இதனையடுத்து இந்த வழக்கில் சூ யான்ஜுவிற்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பதாக சின்சினாட்டி ஃபெடரல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூய்மையான கட்டுக்கதை

இரகசியத்தை வெளியிட்ட சீன உளவாளிக்கு அமெரிக்க நீதிமன்றம் வழங்கியுள்ள கடுமையான உத்தரவு | Chinese Spy Jailed In Us Trade Secrets

இதுகுறித்து பேசியுள்ள ஓஹியோ பெடரல் வழக்கறிஞர் கென்னத் பார்க்கர்,"இந்த வழக்கு ஒரு தெளிவான செய்தியை கொடுத்திருக்கிறது. அமெரிக்க வர்த்தக ரகசியங்களைத் திருட முயற்சிக்கும் எவருக்கும் நாங்கள் தக்க பதிலை அளிப்போம் என்பதுதான் அது" என கூறியுள்ளார்.

சூ, குறிப்பிட்ட சில உயர் அதிகாரிகளை சீனாவுக்கு பயணம் செய்ய முயற்சித்ததும், சீனாவுக்காக முன்னணி அமெரிக்க நிறுவனங்களின் தகவல்களை திருட முயற்சித்தும் விசாரணையில் புலனாவதாக சின்சினாட்டி ஃபெடரல் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆண்டு, சீனாவின் வெளியுறவு அமைச்சகம் சூ, மீதான குற்றச்சாட்டுகளை "தூய்மையான கட்டுக்கதை" என்று குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US