இலங்கைக்கு வர அனுமதி கோரும் சீனக்கப்பல்
அடுத்த ஆண்டு ஜனவரியில் சீனாவின் மற்றுமொரு ஆய்வுக் கப்பல் இலங்கைக்கு வரவுள்ளதாகவும் இது தொடர்பில் சீன அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், “Xiang Yang Hong 03” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஆய்வுக் கப்பல் ஜனவரி 5ஆம் திகதி முதல் மே மாதம் வரை இந்தியப் பெருங்கடலில் ஆய்வுப் பணியில் ஈடுபடும் என குறித்த இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆய்வு நடவடிக்கைகள்
இலங்கை மற்றும் மாலைதீவு துறைமுகங்களில் சீனக்கப்பல் நங்கூரமிடப்பட உள்ளதாகவும், அதற்காக இலங்கை அரசாங்கத்திடமும் மாலைதீவு அரசாங்கத்திடமும் சீன அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இது தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள இந்திய அரசாங்கம், கப்பலுக்கு கடல் ஆய்வு நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்குவது பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |