இலங்கைக்குள் நுழையும் சீன உளவுக்கப்பலால் பெரும் அச்சத்தில் இந்தியா! இராணுவ ஆய்வாளர் அரூஸ்
சீனாவின் விஞ்ஞான ஆய்வுக் கப்பல் ஒன்று இலங்கைக்கு வருவதன் காரணமாக தமது தென் பிராந்திய தளங்கள், தமது தென் பிராந்திய இராணுவ நகர்வுகள் அல்லது இராணுவ நிலையிடங்கள் தொடர்பான அத்துணை தகவல்களையும் சீனா திரட்டிக்கொள்ளுமோ என்ற அச்சம் இந்திய புலனாய்வு துறையான ரோவிற்கு ஏற்பட்டுள்ளதாக இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.
எமது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தமது கப்பலுக்கு இடையூறை ஏற்படுத்த வேண்டாம்! சீனா கோரிக்கை |
சீனாவின் விஞ்ஞான ஆய்வுக் கப்பல் ஏறத்தாழ 700, 800 மைல் சுற்றளவில் உள்ள தளங்கள் தொடர்பான தகவல்களை அக் கப்பலின் ஊடாக திரட்ட முடியும்.
அவ்வாறு திரட்டப்படும் தகவல்களை தமது தலைமையகத்திற்கு அதன் ஊடாக அனுப்ப முடியும்.
அதுமட்டுமன்றி அக் கப்பலில் ஏறத்தாழ 420 தொடக்கம் 470 பேர் வரை பயணம் செய்யக்கூடிய மிக பெரிய கப்பல். அக் கப்பல் 2007ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
இந்திய மொழியில் கூறுவதாக இருந்தால் உளவு கப்பல் என்றுதான் அவர்கள் கூறுகிறார்கள்.
எனவே அதில் வருபவர்கள் அனைவருமே சீனாவின் புலனாய்வு துறையை சேர்ந்தவர்கள்தான் அதில் வருவார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.