முன்னாள் எம்பியை தாக்கிய சீன நாட்டவர்.. பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை
தனது மனைவியின் சகோதரரைச் சந்திப்பதற்காக ஒரு வீட்டிற்குச் சென்ற சீனப் பிரஜை ஒருவர், அங்கு ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தைத் தொடர்ந்து, ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைத் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர், மலாபே பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், மலாபே பொலிஸார் உடனடியாகச் செயல்பட்டு சந்தேக நபரைத் கைது செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
முற்றிய வாக்குவாதம்
தாக்குதலில் காயமடைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்று கோரியதையடுத்து, பொலிஸார் அதற்கான மருத்துவ - சட்ட ஆவணங்களை வழங்கி, அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு உதவியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தச் சம்பவத்திற்குப் பின்னணியில் உள்ள தனிப்பட்ட உறவுகள் குறித்த சில தகவல்கள் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளன.
கைது செய்யப்பட்ட சீனப் பிரஜை இலங்கை பெண் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டவர், அவர் தனது மனைவியின் சகோதரரைச் சந்திப்பதற்காகவே குறித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
சந்தேக நபரின் மைத்துனரான அந்த நபர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் மிக நெருங்கிய நண்பர் என்றும், அவர் நீண்டகாலமாக அந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டிலேயே வசித்து வருகிறார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் அந்த சீனப் பிரஜைக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் முற்றியதன் விளைவாகவே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.