திடீரென மாயமான இராணுவ அமைச்சர்! சீன அரசியலில் மீண்டும் பரபரப்பு
சீன இராணுவ அமைச்சர் லீ ஷாங் பூ திடீரென மாயமான சம்பவம் அந்நாட்டு அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூலை மாதம் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த குயின் கேங் திடீரென மாயமாகி பொது நிகழ்ச்சிகளை தவிர்த்து வந்த நிலையில், அந்நாட்டின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக வாங் யீ நியமிக்கப்பட்டார்.

சனல் 4 காணொளி மூலம் நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்த முயற்சி! ஸ்ரீலங்கா ராமன்ய மகா நிகாய பகிரங்க எச்சரிக்கை
சீன அரசியலில் பரபரப்பு
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இன்று சீன இராணுவ அமைச்சர் லீ ஷாங் பு திடீரென மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர் கடந்த 15 நாட்களாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை எனவும், அரசு நிர்வாக விடயங்களை இவர் தொடர்ந்து தவிர்த்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக அதிபரின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று முக்கிய முடிவு எடுக்க வேண்டிய இராணுவ அமைச்சர் திடீரென மாயமாகியுள்ளமை சீன அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan
