கொழும்பு தாமரை கோபுரத்தில் பணியாற்றிய சீன நபர் கைது
கொழும்பு (Colombo) - வெல்லம்பிட்டிய, பிரந்தியாவத்த பகுதியில் சட்டவிரோத மதுபானம் தயாரித்த குற்றச்சாட்டில் சீன (China) நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெல்லம்பிட்டிய பொலிஸார் மற்றும் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை (STF) இணைந்து நடத்திய சோதனை நடவடிக்கையின் போது, குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிராந்தியாவத்தே பகுதியில் வாடகைக்கு எடுக்கப்பட்ட வீடு ஒன்றில் குறித்த சீன நபர் சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்து வந்துள்ளார்.
கொழும்பு தாமரை கோபுரம்
அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில், சந்தேக நபரிடமிருந்து மொத்தம் 300,018 மில்லி லீற்றர் எத்தனால் மற்றும் 67,5000 மில்லி லீற்றர் சட்டவிரோத மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, சந்தேக நபர் கொழும்பு தாமரை கோபுர திட்டத்தில் பொறியாளராகப் பணியாற்றியவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனடிப்படையில், வெல்லம்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)