சீன கடன் விவகாரம் தொடர்பில் சவால்களை எதிர்நோக்கவுள்ள இலங்கை!
இலங்கையில் புதிதாக பதவியேற்றுக் கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிர்காலத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் போது சீனாவிடம் இருந்து பெற்ற கடன்கள் பாரிய சவாலாக அமையும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய செய்தித்தாள் ஒன்றே இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
சீனாவிடமிருந்து இலங்கை பெற்றுள்ள கடன்கள் தொடர்பில் உரிய தரவுகள் இல்லாதபடியால் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக இந்திய செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை பெற்றுக் கொண்ட கடன்கள்
உத்தியோகபூர்வ தகவலின் படி கடந்த வருடம் இலங்கையின் வெளிநாட்டு கடனான 31.5 பில்லியன் டொலர்களில் 10 வீதமானவை சீனாவிடமிருந்து பெற்றுக் கொண்ட கடன்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தவிர சீனாவின் நிறுவனங்களிடம் இருந்து பெற்றுக் கொண்ட வர்த்தக வங்கி மற்றும் ஏனைய கடன்கள் அதிகம் என தரவுகள் தெரிவிக்கின்றன.
எதிர் நோக்கவுள்ள சவல்கள்
கடந்த வருட இறுதி வரை இவை இலங்கையின் மொத்த வெளிநாட்டு கடன்களில் 20 வீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
எனவே சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைக்கு செல்கின்ற புதிய ஜனாதிபதி
ரணில் விக்ரமசிங்கவுக்கு சீனாவின் இந்த கடன் தொடர்பான உரிய தரவுகள் இல்லாதபடியால் சவால்கள் ஏற்படும் என இந்திய செய்தித்தாள் கூறியுள்ளது.