வவுனியாவில் சீன மொழியை தாங்கியவாறு போராட்டம்
வவுனியாவில் இன்று மேற்கொள்ளப்பட்ட ஒன்றிணைந்த கூட்டுத் தொழிற்சங்க போராட்டத்தின்போது சீனா மொழியில் காட்சிப்படுத்தப்பட்ட பதாதையை தாங்கியவாறு போராட்டப் பேரணியில் கலந்து கொண்டதை அவதானிக்க முடிந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழி பதாதைகளை தாங்கியவாறு போராட்டம் மேற்கொண்ட மக்கள் சீனா மொழியையும் தாங்கி பதாதைகளுடன் போராட்டத்தை மேற்கொண்டிருந்ததனை அவதானிக்க முடிந்துள்ளது.
இன்று நாடாளாவிய ரீதியாக இடம்பெற்றுவரும் போராட்டம் வவுனியாவிலும் முழு அளவில் இடம்பெற்று வருவதுடன், ஒன்றிணைந்த கூட்டுத் தொழிற்சங்கம் இன்றைய போராட்டம் மற்றும் பேரணிகளையும் முன்னெடுத்து வருவதை அவதானிக்க முடிந்துள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராக சுகாதாரத்துறை சார்ந்த தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தினாலும் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா வைத்தியசாலையிலிருந்து பேரணியாகச் சென்று வைத்தியசாலை சுற்று வட்டத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது அரசாங்கத்திலிருந்து வெளியேறு, பொருட்களின் விலையைக் குறைக்க வேண்டும், எரிபொருளின் விலையேற்றத்தைக் குறை போன்ற பதாதைகளை ஏந்தியிருந்ததோடு அரசாங்கத்திற்கு எதிரான கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
இத்தொழிற்சங்கங்களின் ஆர்ப்பாட்டத்தில்
வவுனியா வைத்தியசாலை வைத்தியர்கள் தாதியர்கள், சிற்றூளியர்கள் என பலரும்
கலந்து கொண்டிருந்தனர்.








