இலங்கை பொலிஸாருடன் சீன அரசாங்கம் மேற்கொண்ட முக்கிய கலந்துரையாடல்
உலகளாவிய இணைய நிதி மோசடியுடன் தொடர்புடைய சீன நாட்டவர்கள் பலர், அண்மையில் இலங்கையில் வைத்து கைது செய்யப்பட்டமை தொடர்பில் சீனா அரசாங்கம் இலங்கையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
அதற்கமைய, இலங்கையில் உள்ள சீனத் தூதரகத்தின் பொறுப்பாளர் சூ யென்வெய் (Zhu Yanwei) பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நேற்று(16) சந்தித்து அண்மைய கைதுகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
இணைய மோசடி
இதன்போது, சீனர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கணினிகளில் உள்ள சில உள்ளடக்கங்கள், மாண்டரின் மொழியில் உள்ளதால் அவற்றை மொழிபெயர்ப்பதற்கு சீனாவின் உதவி கோரப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதற்கு சீனத்தரப்பும் தமது உடன்பாட்டை வெளியிட்டுள்ளது.
அதேவேளை, கடந்த சில வாரங்களாக இலங்கையில் இணைய மோசடி தொடர்பாக ஏராளமான சீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை பொலிஸ் தரப்பின் தகவல்களின் படி, இதுவரை 230 சீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

ரவி மோகன் பேசியதை கேட்டு கெனிஷா கண்ணீர்.. சொத்துக்கள் முடக்கம், பிரச்சனைகள் பற்றி எமோஷ்னல் Cineulagam

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

உக்ரைனின் மூலோபாய நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்: முதல்முறையாக ஊடூருவலை உறுதிப்படுத்திய கீவ்! News Lankasri
