இலங்கை நாளிதழில் அமெரிக்காவுக்கு எதிராக சீனாவின் செயல்பாடு!
இலங்கையின் உள்ளூர் நாளிதழில் வெளியிடப்பட்ட கட்டண விளம்பரத்தின் ஊடாக இலங்கையின் சீனத் தூதரகம், அமெரிக்காவை கடுமையாக விமர்சித்துள்ளது.
சீனா மற்றும் இலங்கைக்கு அழைப்பு விடுக்கப்படாத, அமெரிக்காவின் ஜனநாயகத்திற்கான மெய்நிகர் உச்சி மாநாட்டை இலக்கு வைத்து இந்த பணம் செலுத்திய விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், ஜனநாயக அமைப்பில் கட்டமைப்பு குறைபாடுகள் மற்றும் பிரச்சினைக்குரிய நடைமுறைகளை அமெரிக்கா கொண்டிருப்பதாக சீனா குற்றம் சுமத்தியுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், மாலைதீவு மற்றும் நேபாளம் ஆகியவை தெற்காசிய நாடுகளில் ஜனநாயகத்திற்கான உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளன.
எனினும் உச்சி மாநாட்டுக்கு இலங்கையுடன் சீனாவும் ரஷ்யாவும் அழைக்கப்படவில்லை. ஜனாதிபதி ஜோ பைடன் 2021 டிசம்பர் 9ஆம் திகதியன்று அரசாங்கம், சிவில் சமூகம் மற்றும் தனியார் துறையின் தலைவர்களுக்காக ஒரு மெய்நிகர் உச்சிமாநாட்டை நடத்துகிறார்.
ஜனநாயகம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து இந்த உச்சிமாநாட்டில் கவனம் செலுத்தப்படவுள்ளது.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 1 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
