இலங்கைக்கு எதிராக வழக்கு தொடரும் சீன நிறுவனம்
சீனாவில் இருந்து சேதப் பசளையை இலங்கைக்கு ஏற்றுமதி செய்த சின்டாவே சீவின் பயோடெக் நிறுவனம் (Seawin biotech group) இலங்கைக்கு எதிராக வழக்கு தொடர தீர்மானித்துள்ளதாக சீனாவின் குளோபல் டைம்ஸ் செய்தி சேவை தெரிவித்துள்ளது.
49.3 மில்லியன் டொலர் கொடுக்கல், வாங்கலின் கீழ் இந்த சேதனப் பசளை தொகையில் பாதிப்பை ஏற்படுத்தும் நுண்ணுயிர்கள் இருந்ததாக கூறி, இலங்கை, இந்த பசளை தரையிறக்கப்படுவதை நிராகரித்தது.
குறித்த கப்பல் தற்போது சிங்கப்பூரை நோக்கி பயணித்து கொண்டிருப்பதுடன் கப்பல் சிங்கப்பூரை சென்றடைந்ததும் வழக்கை தொடர சீன நிறுவனம் தீர்மானித்துள்ளது. சர்வதேச சமரச நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடரப்படவுள்ளது.
  எவ்வாறாயினும் சீனாவின் பசளை சம்பந்தமாக ஏற்கனவே இலங்கையில் வழக்கொன்று நடைபெற்று வருகிறது.
அத்துடன் தமது நிறுவனத்தின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளமை தொடர்பில் சீன நிறுவனம், இலங்கை தாவரங்களை தனிமைப்படுத்தும் சேவை அமைப்பிடம் 8 மில்லியன் டொலர்களை இழப்பீடாக கோரியுள்ளது. 
 
    
     
    
     
    
     
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        