சீன நிறுவனம் கிடுக்குப்பிடி! இலங்கைக்கு எதிராக தொடுக்கப்பட்டது வழக்கு
சேதன உரம் நிராகரிக்கப்பட்டமைக்கு நட்டஈடாக 8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென கோரி சீன நிறுவனம், சிங்கப்பூர் தீர்ப்பாயத்தில் இலங்கைக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளது.
சீனாவின் Quingdao Seawin Biotech நிறுவனம் இவ்வாறு இலங்கைக்கு எதிராக சிங்கப்பூரில் முறைப்பாடு செய்துள்ளது. இலங்கையின் Colombo Commercial Fertilizers Ltd நிறுவனத்திடம் சீன நிறுவனம் நட்டஈடு கோரியுள்ளது.
மூவர் அடங்கிய நடுவர் குழாம் ஒன்றின் மூலம் இந்த முறைப்பாடு விசாரணை செய்யப்பட வேண்டுமெனவும் இரண்டு தரப்பிலிருந்தும் தலா ஒருவரை நியமிக்க முடியும் எனவும் சீன நிறுவனம் கோரியுள்ளது.
உற்பத்தி, போக்குவரத்து உள்ளிட்ட செலவுகளை ஈடு செய்யும் வகையில் இலங்கை, தமக்கு நட்டஈடு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உடன்படிக்கையில் காணப்பட்ட ஒர் பிழையினால் சீன நிறுவனம் சிங்கப்பூர் தீர்ப்பாயத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து கலந்துரையாடப்பட உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 1 மணி நேரம் முன்
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri