கொழும்பு துறைமுக முதலீடு தொடர்பாக சீன நிறுவனத்தின் முக்கிய தீர்மானம்
சைனா மெர்ச்சண்ட்ஸ் போர்ட் நிறுவனம் (China Merchants Port), கொழும்பு துறைமுக கொள்கலன் மையத்துக்கான தமது முதலீட்டு தொகையை 30 மில்லியன் டொலர்களால் குறைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த நிறுவனமே 'கொழும்பு இண்டர்நேசனல் கென்டெய்னர் டெர்மினல்ஸ் லிமிடெட்டின்' [Colombo International Container Terminals (LTD)] கட்டுப்பாட்டு பங்குகளை கொண்டுள்ளது.
முன்னதாக அதன் முனையத் திறனை விரிவுப்படுத்துவதற்காக 90 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிறுவனம் முதலீடு செய்யவிருந்தது.
அமைச்சரவை ஒப்புதல்
எனினும், இலங்கைத் துறைமுக அதிகாரசபை, முனையத்தை விரிவுபடுத்துவதற்கு அல்லது கொள்கலன் முற்றத்தை மேம்படுத்துவதற்கு இடம் வழங்க முடியாது என்று கூறியதை அடுத்தே இந்த முதலீட்டு குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2020 அக்டோபரில் 90 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் கொழும்பு துறைமுகத்தில் திறனை விரிவுபடுத்துவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை முதலில் ஒப்புதல் அளித்தது.

முனையத்தின் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டே இந்த திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri