சபுகஸ்கந்த முதலீடுக்கு ஆர்வம் காட்டியுள்ள சீன - அமெரிக்க நிறுவனங்கள்!
சீனா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐக்கிய அரபு இராஜ்சியம் உள்ளிட்ட இருபது வெளிநாட்டு நிறுவனங்கள், சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை விரிவுபடுத்துவதற்காக இணைந்து பணியாற்ற ஆர்வம் காட்டியுள்ளன.
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் தொடர்பில் ஏலதாரர்களை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் முன்னதாக அழைத்திருந்தது.
இதன்படி குறித்த திட்டங்களை ஏற்றுக்கொள்வது வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்த நிலையில் மேற்படி நிறுவனங்கள் ஆர்வம் காட்டியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிலையத்தின் விரிவாக்கம்
சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தின் விரிவாக்கம் முதன்முதலில் 2010 இல் முன்மொழியப்பட்டது.

போர் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அதன் வெளியீடு தாமதமாகியதாக கூறப்படுகிறது.