சீனாவின் உற்றுநோக்கலுக்குள் இலங்கை நுழைந்த பிரான்ஸ் தலைவர்(Video)
ஜப்பானின் வெளியுறவு அமைச்சர் யோசிமசா அயாஸி இலங்கைக்கு வருகைத்தந்துள்ள அதே நேரத்தில் பிரான்ஸ் இம்மானுவேல் மக்ரோனும் இலங்கைக்கு அதிகாரபூர்வமற்ற திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இதுவரை காலமும் எந்தவொரு பிரான்ஸ் தலைவரும் இலங்கையில் கால் பதிக்காத நிலையில் இம்மானுவேல் மக்ரோனின் வருகை என்பது அதற்கான ஆரம்பப்புள்ளியாக பார்க்கப்படுகிறது.
இந்த குறுகிய கால விஜயத்தில் பிரான்ஸ் அரச தலைவருக்கும் இலங்கை ஜனாதிபதிக்கும் இடையில் அரசியல் சந்திப்பு ஒன்று இடம்பெற உள்ளதாக அரச தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகியிருந்தன.
எனினும் இந்த சந்திப்பானது கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் செயலகத்தில் இடம்பெற்றதா? அல்லது கட்டுநாயக்காவோடு மட்டுப்படுத்தப்பட்டதா? என எவ்வித தகவலையும் அரசாங்கம் இது வரையில் வெளியிடவில்லை.
இதுவரை காலமும் இலங்கையில் எந்த ஒரு பிரான்ஸ் திட்டங்களும் வகுக்கப்படாக நிலையில் இந்த விஜயத்தின் தொடக்கம், சீனாவின் இலங்கை மீதான நோக்கத்தை பிரான்ஸ் சீண்டுவதற்கான ஆரம்ப புள்ளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் இந்தோ - பசுபிக் பிரதேசத்தில் இராணுவ பலத்தை அதிகரிக்கும் சீனாவானது இலங்கையில் பிரான்ஸின் உள்நுழைவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்பதே அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.
இவ்வாறான இலங்கை மற்றும் உலக அரசியல் நிலவரங்களின் தொகுப்பை அலசி ஆராய்கிறது இன்றைய செய்திவீச்சு..
.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
