சோதனையின் போது விபத்துக்குள்ளான சீன ரொக்கெட்
சீன (China) தனியார் நிறுவனமொன்றின் டியான்லாங் - 3 எனப்படும் ரொக்கெட்டானது (ஏவூர்தி) முதல் கட்டமைப்பு சோதனையின் போது தீப்பற்றி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தானது, நேற்று (30.06.2024) இடம்பெற்றுள்ளது.
சீனாவின் தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமொன்றின் டியான்லாங் - 3 (Tianlong-3) என பெயரிடப்பட்டுள்ள ரொக்கெட் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இணைப்புக் கோளாறு
இதன்போது, ரொக்கெட் பொருத்தி வைக்கப்பட்டிருந்த தளத்திற்கும் ரொக்கெட்டிற்கும் இடையில் ஏற்பட்ட இணைப்புக் கோளாறு காரணமாக குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
Wow. This is apparently what was supposed to be a STATIC FIRE TEST today of a Tianlong-3 first stage by China's Space Pioneer. That's catastrophic, not static. Firm was targeting an orbital launch in the coming months. https://t.co/BY9MgJeE7A pic.twitter.com/L6ronwLW1N
— Andrew Jones (@AJ_FI) June 30, 2024
இதனை தொடர்ந்து, ரொக்கெட் தீப்பற்றிய நிலையில், சீனாவின் மத்திய பகுதியில் உள்ள உயரமான மலைப்பகுதியில் விழுந்துள்ளது.
அதேவேளை, இந்த சம்பவத்தின் போது பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |