ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்தை சீனா முன்னெடுக்கும்
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்தைச் சீனா முன்னெடுக்கும் என்று சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வெளியுறவு அமைச்சருடன் இடம்பெற்ற தொலைபேசி கலந்துரையாடலின் போது இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான உடன்படிக்கையை இலங்கை மறுபரிசீலனை செய்ய முற்படுவதாக வெளியான தகவல்களுக்கு மத்தியிலேயே இந்தக்கருத்தைச் சீனாவின் வெளியுறவு அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
2019 ல் பதவியேற்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, விரைவில் இந்த உடன்படிக்கையை மீள்பரிசீலனை செய்யச் சீனாவுடன் பேச்சு நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.
ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் துறைமுகத்தை 99 வருடக் குத்தகைக்கு வழங்கியமையை கண்டித்தே இந்தக்கருத்தை கோட்டாபய வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 3 மணி நேரம் முன்
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan