கைவிடப்பட்ட இலங்கை! இலங்கையின் கடன் கோரிக்கையை நிராகரித்த சீனா!
இலங்கையின் கோரிக்கையை நிராகரித்த சீனா
இலங்கை தனது நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாத நிலையில் உள்ளது என்ற அடிப்படையில், சீன அரசாங்கம், இலங்கையுடன் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பரிமாற்ற ஏற்பாட்டில் ஈடுபடுவதற்கான சாத்தியத்தை நிராகரித்துள்ளது.
இலங்கையின் தூதுவர் பாலித கொஹோன, சீனாவின் ஆசிய விவகார திணைக்களத்தின் பணிப்பாளர் லியு ஜின்சோங்கை பீய்ஜிங்கில் சந்தித்த போது, சீன அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில வார இதழ் ஒன்று கூறுகிறது.
விதிமுறைகளை இலங்கை பின்பற்றவில்லை
தமது விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை இலங்கை மீறுவது குறித்து சீன நிதி நிறுவனங்கள் குறித்து கவலை கொண்டுள்ளதாக தூதரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகள் உட்பட, உள் மற்றும் வெளி காரணிகளால், சீனாவும் பொருளாதார மந்தநிலை மற்றும் பணப்புழக்க பிரச்சனையை சந்தித்து வருவதாகவும் சீன அதிகாரி, பாலித கொஹனவிடம் கூறியுள்ளார்.
எனினும், 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதிக்கான இலங்கையின் கோரிக்கை பரிசீலனையில் இருப்பதாக சீன அதிகாரி தெரிவித்துள்ளார்.
சீனா சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு மையத்தின் அவசர மனிதாபிமான உதவியாக இலங்கைக்கு முன்னர் 500 மில்லியன் ரிங்கிட் சீனாவிடமிருந்து கிடைத்தது.
டீசல் மற்றும் உரத்துக்கு உதவ முடியும்
அத்துடன், கோயில்கள், பாடசாலைகள் மற்றும் பிற தொண்டு நிறுவனங்கள் மூலம் சேகரிக்கப்பட்ட உதவிகளும் இலங்கைக்கு அனுப்பப்பட்டன.
இதேவேளை, இலங்கையின் வெளிவிவகார திணைக்களத்தின் ஊடாக முறையான கோரிக்கை விடுக்கப்பட்டால், டீசல் மற்றும் உரங்களை வழங்குவது குறித்து சீனா பரிசீலிக்க முடியும் என தலியு, கொஹனவிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் துறைமுகம் ஒன்றை கைப்பற்றிய சீனா! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட அவுஸ்திரேலியா
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)