சீனாவில் இரண்டு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 500 பேர் படுகாயம்
சீனாவின் பீஜிங் மாகாணம் ஷங்பிங் நகரில் இரண்டு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 500க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்துள்ளதுடன்,102 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் பீஜிங் மாகாணம் ஷங்பிங் நகரில் இருந்து புறப்பட்ட பயணிகள் தொடருந்து தண்டவாளத்தில் பனி படர்ந்திருந்ததால் தானியங்கி அமைப்பால் தொடருந்து நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதன்போது மற்றுமொரு தொடருந்து வந்து நிறுத்தப்பட்டிருந்த தொடருந்து மீது மோதியுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்களின் விபரம்
இந்த கோர விபத்தில் 2 தொடருந்துகளிலும் பயணித்த 500க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.