இலங்கையில் பாரிய அபிவிருத்தித் திட்டங்களில் முதலீடு செய்யவுள்ள சீனா
இலங்கையில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் பலவற்றில் சீனா முதலீடு செய்யவுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ ஷென்ஹோங், இலங்கையின் முக்கிய ஊடகவியலாளர்கள் சிலருடன் நடத்திய சிநேகபூர்வ கலந்துரையாடலின் போது இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இலங்கையில் புதிய அபிவிருத்தித் திட்டங்கள் பலவற்றை முன்னெடுத்து அவற்றில் முதலீடு செய்ய சீனா ஆர்வம் கொண்டுள்ளது.
கொழும்பு நகர்
கொழும்பு நகரை அபிவிருத்தி மையமாக மாற்றியமைப்பது அதன் நோக்கமாகும். அதன் ஒருகட்டமாக கொழும்பு கண்காட்சி மண்டபத்தில் நவீன வசதிகள் கொண்ட கருவிகள் பொருத்தப்பட்டு, மிகச் சிறந்த கண்காட்சி மண்டபமாக அதனை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அதே போன்று தென்னிலங்கையில் சீனாவின் சினோபெக் நிறுவனம் மேற்கொண்டுள்ள 2.5 பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஹம்பாந்தோட்டை எரிபொருள் சுத்திகரிப்பு நிலைய முதலீடானது, மிகக் குறிப்பிடத்தக்க ஒரு முதலீட்டு செயற்பாடாகும்.
அதன் மூலம் வருமானம் அதிகரிக்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கானவர்களுக் நேரடி மற்றும் மறைமுக தொழில்வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Super Singer: பாதியில் பாடலை நிறுத்திய சிறுமி.... அதிருப்தியில் அரங்கம்! நடுவர்களின் முடிவு என்ன? Manithan

7 அறைகள் முதல் உடற்பயிற்சி கூடம் வரை.., சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள வசதிகள் என்னென்ன? News Lankasri

பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்: அடுத்த 48 நாட்கள் என்ன நடக்கும்? டால்பின்களின் வரவேற்பு வீடியோ News Lankasri
