சீன பிரதி அமைச்சர் இலங்கைக்கு விஜயம்
சீனாவின் (China) கொம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகார பிரதி அமைச்சர் சன் ஹையான், இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்வுள்ளார்.
இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு அவர் இன்று (23.04.2024) நாட்டை வந்தடையவுள்ளார்.
அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்தன (Dinesh Gunawardane) ஆகியோரை அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானிய ஜனாதிபதி
இதேவேளை, நாளைய தினம் ஈரானிய (Iran) ஜனாதிபதி இப்ராஹிம் ரய்சி (Ebrahim Raizi) இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
உமா ஓயா அபிவிருத்தித் திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நோக்கில் அவர் இலங்கை விஜயம் செய்ய உள்ளார்.
இந்நிலையில், ஈரானிய ஜனாதிபதி தற்பொழுது பாகிஸ்தானுக்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |