சீனா இலங்கை மீது மேற்கொள்ளும் யுத்தம்: தமிழர் தாயகப்பகுதிக்கு ஆபத்து - இ.கதிர் எச்சரிக்கை
சீனா இலங்கை மீது ஒரு சத்தம் இல்லாத யுத்தம் ஒன்றினை மேற்கொண்டு வருகின்றது, அதன் விளைவுகள் மிக பாரதூரமாக தமிழர் தாயகத்தில் அமையும் என்பதையும் தெளிவாக கூறியுள்ளோம் என ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று (19) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அண்மை நாட்களில் வடமாகாணத்தில் சீனத்தூதுவரின் வருகை, செயல்பாடுகள் தொடர்பிலும் தமிழ் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களின் கருத்துக்களையும் மக்கள் அறிந்துகொள்ளவேண்டிய தேவை உள்ளது.
சீனாவின் இலங்கை மீதான ஆக்கிரமிப்புக்கள் தொடர்பில் முன்னர் நாங்கள் கருத்துக்களை தெரிவித்திருந்தோம். சீனாவின் அடுத்த கட்ட நகர்வு இலங்கையில் தமிழர் தாயகத்தில் வடமாகாணத்தினை கைப்பற்றும் நோக்குடன் இலங்கை அரசின் அமைச்சு பொறுப்புக்களில் இருக்கின்ற அரசியல் கட்சிகளின் அனுசரணையுடன் வடமாகாணத்தில் கால்பதிக்க நினைக்கின்றது.
சீனா உலகத்தில் எந்த நாடுகளில் அபிவிருத்தி என்ற போர்வையில் சென்றுள்ளதோ அந்த நாடு அபிவிருத்தி அடைந்ததாக வரலாற்றில் நான் கண்டதில்லை மாறாக அந்த நாடுகள் சீனாவிடம் அடிமைப்படுத்தப்பட்டு பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைய முடியாமல் பின்னடைவினை நோக்கி சென்று நாடு முன்னேற்றம் கண்டதாக நாங்கள் அறிந்ததில்லை.
இலங்கையும் ஒரு மிகமோசமான பொருளாதார நெருக்கடியினை சந்திக்கக்கூடிய நிலையில் இன்று சீனாவின் பக்கம் சாய்ந்து நிக்கின்றது. இந்த நிலமையினை சீனாவே உருவாக்கி நிக்கின்றது.
இது தொடர்பில் தமிழர்கள் தரப்பினை சார்ந்த மக்கள் பிரதிநிதிகள் மௌனமாக இருக்கின்றார்கள் சீனாவிற்கு எதிராக பலமான எதிர்பினை கொடுக்க தாமதித்து வருகின்றார்கள்.
அண்மையில் சீனத்தூதுவர், யாழ், மன்னார் மாவட்டங்களுக்கு சென்று கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பார்வையிட்டு சென்றுள்ளார் அந்த இடங்களில் வளங்களை ஒளிப்பதிவுசெய்து எமது வளங்களின் ஆக்கிரமிப்பினை எவ்வாறு செய்யலாம் என்ற திட்டத்தினை ஆரம்பித்துவைத்துள்ளார்கள்.
பருத்தித்துறை என்பது மிக முக்கியமான முனை அது ஒரு துறைமுகம் யாழ்ப்பாணத்திற்கும் இந்தியாவின் வேதாரணியத்திற்கும் மிக அண்மையாக இருக்கின்றது. எங்களுக்கு மட்டுமல்ல இந்தியாவிற்கும் ஒரு அச்சுறுத்தலை சீனா கொடுப்பதாகத்தான் நாங்கள் கருதுகின்றோம்.
இந்த செயற்பாடு எதிர்காலத்தில் மிகமோசமான பாரதூரமான விளைவுகளை தமிழர் தாயகத்தில் ஏற்படுத்தும்.
மன்னாருக்கு சென்று இராமர் பாலம் வரை சீனத்தூதர் சென்றுள்ளார் வடமாகாண அபிவிருத்திக்காக இராமர் பாலத்தினை சென்று பார்க்கவேண்டிய தேவை அவருக்கு இல்லை இதுவும் இந்தியாவிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் செயற்பாடகத்தான் இருக்கின்றது.
இந்தியா இந்த விடையத்தில் மிகத்தெளிவாக மிகவேகமாக முடிவெடுக்கவேண்டும் மௌனமாக இருக்குமாக இருந்தால் சீனாவின் ஆக்கிரமிப்பு தமிழர் தாயக பகுதிகளில் மிகவேகமாக பரவி வருகின்றது.
அதனால் இந்தியாவிற்கு பேராபத்திற்கு இருக்கின்றது உண்மையில் வடமாகாணத்தினை சீனா ஆக்கிரமிப்பதன் நோக்கம் இந்தியாவினை கண்காணிப்பது, அச்சுறுத்தல் விடுவது, இலங்கையின் வளங்களை சீனா சுரண்டிக்கொள்வதற்கு வடகிழக்கில் இந்தியா தடையாக இருக்கின்றதோ அந்த தடையினை வடகிழக்கில் இருக்கின்ற தமிழ்மக்களை தமக்கு சார்பாக மாற்றி உடைத்தெறிந்து இந்தியாவினை கண்காணித்து இந்தியாவிற்கு அச்சுறுத்தல் விடுவதுதான் சீனாவின் நோக்கம்.
இதனை மிகவேகமாக வடகிழக்கில் இருக்கின்ற தமிழ்அரசியல் கட்சிகளுடன் பேசி இந்தியா
தீவிரமான முயற்சிகளில் ஈடுபடவேண்டும் இந்தியா தாமதிக்குமாக இருந்தால்
கவலைக்குரிய விடையமாக மாறும் என்றும் இதன்போது கருத்து தெரிவித்துள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் சிங்கம் சக மகர உற்சவம்



