சீனாவின் பட்டு வழிப்பாதை திட்டம்-சுயாட்சியை அர்ப்பணிக்கும் மட்டத்தில் இலங்கை
சீனாவின் பட்டு வழிப்பாதை திட்டத்தின் (One Belt One Road) முயற்சிகள் காரணமாக அதன் பங்காளி நாடுகளுக்கு எதிர்மறையான தாக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக South-South reserch initiative என்ற ஆய்வு நிறுவனம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.
செம்பியா, பாகிஸ்தான் லாவோஸ், அங்கோலா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் மேற்கொண்ட ஆய்வின் பின்னர் ஆய்வு நிறுவனம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
நீண்டகால பிரதிபலன்கள் குறித்து கவனத்தில் கொள்ளப்படவில்லை
சீனாவின் ஒரு பட்டை -ஒரு வழி (One Belt One Road) திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட சில திட்டங்கள், அதனால் கிடைக்கும் நீண்டகால பிரதிபலன்களை பற்றி போதுமான அளவில் கவனத்தில் கொள்ளாது மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள்.
இந்த திட்டங்களில் பல திட்டங்கள் பெரும்பாலும் அரசாங்கம் மற்றும் கொள்கைகளில் சார்ந்துள்ளன.
சீனாவின் செலவுகளில் பெருந்தொகையான பங்கை தாம் ஈடு செய்ய வேண்டும் என்ற காரணத்தினாலேயே சில நாடுகள் இதற்கு ஒத்துழைப்பு வழங்க தயங்கியுள்ளன.
சிவில் சமூகம் மற்றும் பிரதேச மக்களின் பிரச்சினைகளை போதுமான அளவு கவனத்தில் கொள்ளாது அரச நிறுவனங்களுடன் தொடர்புக்கொள்வதிலேயே சீன கூடுதல் கவனத்தை செலுத்தியுள்ளது.
செம்பியா, பாகிஸ்தான், அங்கோலா, லாவோஸ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுடன் சீன சம்பந்தப்பட்டமையின் மூலம் இதனை தெளிவாக காணக்கூடியதாக உள்ளது.
செம்பியாவின் கைத்தொழில் துறையை அழிக்கும் சீன முதலீட்டாளர்கள்
கடந்த 2013 ஆம் ஆண்டு சீனா நடைமுறைப்படுத்த ஆரம்பித்த பட்டு வழிப்பாதை திட்டத்தின் முயற்சி காரணமாக அதனுடன் சம்பந்தப்பட்ட அனைத்து நாடுகளும், பொருளாதார, சமூக மற்றும் அரசியல் மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளன.
செம்பியாவில் சீனா செய்துள்ள முதலீடுகளால் செம்பிய அரசுக்கு பிரதிபலன்கள் கிடைக்கும் எவ்வித வழிகளும் உருவாக்கப்படவில்லை.
இதற்கு பதிலாக சீன முதலீட்டாளர்கள் செம்பியாவின் கைத்தொழில் துறையை அழிக்கும் விதத்தை அந்நாட்டு அரசு கண்ணை மூடிக்கொண்டு வேடிக்கை பார்ப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள பலருக்கு சீனாவின் மிகப் பெரிய மீன்பிடி படகுகளுடன் போட்டிப் போட முடியாத காரணத்தினால், அவர்கள் பீதிக்கு உள்ளாகி இருப்பது யதார்த்தமாகி மாறியுள்ளது.
சீனாவின் பட்டு வழிப்பாதை திட்டத்தின் கீழ் பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் அந்நாட்டில் சமூக பதற்றம் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மைக்கும் காரணமாக அமைந்துள்ளது.
லாவோஸ் சீனாவின் கடனாளி நாடாக மாறியுள்ளதால், அதன் ஊடாக லாவோஸின் கொள்கை திட்டமிடல் நடவடிக்கைகளிலும் சீனா தனது பலத்தை பயன்படுத்தும் நிலைமை உருவாகியுள்ளது.
சீனாவின் அபிவிருத்தித்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட அனைத்து நாடுகளிலும் அந்த முதலீடுகளின் பிரதிபலன்கள் மூலம் பிரயோசனத்தை பெற முடியாத காரணத்தினால் மக்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்துள்ளது.
சுய நிர்வாகத்தை அர்ப்பணிக்கும் மட்டத்திற்கு சென்றுள்ள இலங்கை
அதேவேளை இலங்கை, முக்கியமாக கொழும்பு சர்வதேச நிதி நகரம், அம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்பு துறைமுக விரிவாக்கம், மத்தள விமான நிலையம் மற்றும் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் போன்ற ஏனைய உட்கட்டமைப்பு வளர்ச்சித்திடடங்களை South-South reserch initiative ஆய்வு நிறுவனம் விரிவாக ஆராய்ந்துள்ளது.
இப்படியான திட்டங்களின் பிரதிபலனாக இந்த திட்டங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை எவ்வாறு முகாமைத்துவம் செய்வது என்பது தொடர்பிலான சிக்கலில் இலங்கை ஓரளவிலான தனது சுயாட்சியை அர்ப்பணிக்கும் மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது.
சீனாவின் பட்டு வழிப்பாதை திட்டத்தின் முதலீடுகளில் குறிப்பிடத்தக்க பங்கு சீன அரச நிறுவனங்களிடம் இருந்து கிடைப்பதால், இலங்கையில் அதிகரித்து வரும் கடன் சுமை மற்றும் இறையாண்மை இழப்பு தொடர்பில் கவலைக்குரிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
மேலும் இலங்கையில் முன்னெடுக்கப்படும் சீனாவின் பட்டு வழிப்பாதை திட்டங்களில் வெளிப்படை தன்மை இல்லாததை காணக்கூடியதாக இருப்பதுடன் ஊழல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் South-South reserch initiative என்ற ஆய்வு நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.