சீனாவில் மக்கள் தொகை பாரிய வீழ்ச்சி
சீனாவில் கடந்த 2021ஆம் ஆண்டை விட, 2022 ஆம் ஆண்டு சனத் தொகை பாரிய வீழ்ச்சியடைந்துள்ளதாளவும் இது கடந்த 60 ஆண்டுகளில் வீழ்ச்சியடைந்தமை இதுவே முதல் தடவை எனவும் கூறப்படுகின்றது.
சீனாவில் 2021ஆம் ஆண்டு மக்கள் தொகை 1.41260 பில்லியனாக இருந்த நிலையில், 2022ஆம் ஆண்டின் முடிவில் 1.41178 பில்லியன் மக்கள் மட்டுமே உள்ளதாகவும் சீன தேசிய புள்ளியியல் அமைப்பு தெரிவித்துள்ளது.
2021ஆம் ஆண்டில் 1,000 பேருக்கு 7.52 என்ற குழந்தை பிறப்பு விகிதம் இருந்த நிலையில் தற்போது 2022 ஆம் ஆண்டில் இதன் அளவு 6.77 ஆகக் குறைந்துள்ளது. மேலும் இறப்பு விகிதம், பிறப்பு விகிதத்தைவிட அதிகரித்திருக்கிறது.
கடந்த ஆண்டு இறப்பு விகிதம் 7.18 ஆகவுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டில் "ஒரு குழந்தை கொள்கையை" சீன அரசு தளர்த்தியதுடன், கடந்த ஆண்டு முதல் தம்பதிகள் மூன்று குழந்தைகளைப் பெறவும் அந்த நாடுஅனுமதி வழங்கியது. இருந்தபோதும் சீனாவில் தற்போது பிறப்பு விகிதம் பாரிய அளவிற்கு சரிந்துள்ளது.
சீனாவில் மக்கள் தொகை
இந்த நிலை தொடர்ந்தால் சீனாவில் 2035ஆம் ஆண்டில் வயதானவர்கள் மட்டும் அதிகளவில் காணப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சீனாவின் மக்கள் தொகையில் 60 வயதிற்கும் மேற்பட்டோர் 30 சதவீதத்திற்கும் அதிகமாகள்ளனர் என்றும் குறித்த புள்ளிவிபரவியல் கூறியுள்ளது.
சீனாவின் ஹாங்சோ மாகாணம் அறிவித்துள்ளது. நான்சாங் மற்றும் சாங்ஷா மாகாணங்களும் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்பவர்களுக்கு சலுகை திட்டங்களை உருவாக்கியுள்ளன. சீனா மட்டுமல்ல கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளிலும் மக்கள் தொகை குறைந்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 29 நிமிடங்கள் முன்

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri
