சீனாவின் மத்தியஸ்தத்தால் இழுபறியில் ஐ.எம்.எப். உதவி: விஜயதாஸ ராஜபக்ச
"சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கை நிதி உதவி பெறும் விவகாரம் இழுபறியில் உள்ளது. சீனாவின் மத்தியஸ்தமே அதற்குக் காரணம்." என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவியைப் பெறுவதற்கான கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா - சீனாவின் நிலைப்பாடு என்ன? என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நிதி உதவி பெறும் விடயத்தில் சீனா மத்தியஸ்தம்
அவர் மேலும் தெரிவித்ததாவது, "இந்த விடயத்தில் நாம் நடுவில் இறுகி நிற்கின்றோம். சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிதி உதவி பெறும் விடயத்தில் சீனா மத்தியஸ்தம் செய்து உதவி வருகின்றது. அது இந்தியாவுக்கு விருப்பம் இல்லை. ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு செயற்படும் நாடுகள் அவை.
இந்த இரண்டு நாடுகளிடம் உதவியைப் பெற்றுக்கொண்டுதான் நாம் பயணிக்கின்றோம்.
சீனா மத்தியஸ்தம் வகிப்பதால் இந்தியா கொண்டுள்ள அதே நிலைப்பாட்டைப் போல் இன்னும் சில நாடுகளும் கொண்டுள்ளன. முக்கியமாக அமெரிக்கா. இதனால் இந்த விவகாரம் இழுபறியில் உள்ளது"என தெரிவித்துள்ளார்.

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
