இலங்கைக்கான சீனாவின் கடன் தடை குறித்து இந்தியா விமர்சனம்
இலங்கைக்கான கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவின் அரச வங்கி புதிய உறுதிக்கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக வெளியான தகவல் குறித்து இந்திய ஊடகம் ஒன்று தகவல்களை வெளியிட்டுள்ளது.
பண நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு சீனா இரண்டு வருட கடன் தடையை வழங்குகிறது என்ற தலைப்பில் இந்த செய்தியை தெ ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.
முன்னதாக 10 வருட கடன் தடைக்காலம் மற்றும் 15 வருடங்கள் கடன் மறுசீரமைப்பை உள்ளடக்கிய கடன் நிலைத்தன்மை நிதி வசதியை இந்தியா வழங்கியிருந்தது.
எனினும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் 99 வருட குத்தகைக்கு அனுமதியளித்த இலங்கை தேசத்திற்கு பீஜிங், இரண்டு வருட கடன் தடையை மட்டுமே வழங்கியுள்ளது.
இந்தியாவின் கடன் நிலைத்தன்மை பகுப்பாய்
பாரிஸ் கிளப்பும் இந்தியாவும் கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வின் அடிப்படையில் இலங்கைக்கு நிபந்தனையற்ற மற்றும் வெளிப்படையான ஆதரவை வழங்கியிருந்தாலும், தமது நெருங்கிய கூட்டாளியான இலங்கைக்கு 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்காக, இரண்டு வருட கடன் தடையை சீனா வழங்கியுள்ளதாக தெ ஹிந்துஸ்தான் டைம்ஸ் வழங்கியுள்ளது.
சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வங்கியின் துணைத் தலைவர், இலங்கையின் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திற்கு திங்கட்கிழமை எழுத்து மூலம் இதனை அறிவித்துள்ளார்.
இதன்படி 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் வங்கியின் கடனுக்கான அசல் மற்றும் வட்டியை இலங்கை திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை.
இந்தநிலையில் நடுத்தர மற்றும் நீண்ட கால கடன் மறுசீரமைப்பு தொடர்பாக
கொழும்புடன் பேச்சுவார்த்தை செயல்முறையை விரைவுபடுத்த தமது வங்கி விரும்புவதாக
அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.