கைகோர்த்துக்கொண்ட மூன்று முக்கிய யூரேசிய சக்திகள்! அமெரிக்காவுக்கு முக்கிய செய்தி
சீனாவின் தியான்ஜினில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாடு, மூன்று முக்கிய யூரேசிய சக்திகளான இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா ஆகியவை தங்கள் ஒற்றுமையையும் வலிமையை வெளிப்படுத்தும் தளமாக மாறியுள்ளது.
அமெரிக்காவில் ஒரு வலுவான செய்தியை அனுப்பவும் ஒரு மேடையாக குறித்த மாநாடு மாறியுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் சீனப் ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோர் சிரிப்பையும், கட்டிப்பிடிப்பையும் பரிமாறிக் கொண்ட விடயம் தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
ட்ரம்ப் நிர்வாகம் வரி தாக்குதல்
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கியதற்காக இந்தியா மீது ட்ரம்ப் நிர்வாகம் வரி தாக்குதலைத் தொடங்கிய பின்னர், ரஷ்யாவுடனான உடனான இந்தியாவின் உறவுகளின் பின்னணி தற்போது முக்கியத்தவம் பெற்றுள்ளது.
மோடியும், புடினும் கைகோர்த்து நடந்து செல்வது, அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் இந்தியாவை சரணடையச் செய்யாது என்றும் ரஷ்யாவுடனான அதன் நீண்டகால உறவுகளை அழிக்காது என்பதைக் குறிப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
Interactions in Tianjin continue! Exchanging perspectives with President Putin and President Xi during the SCO Summit. pic.twitter.com/K1eKVoHCvv
— Narendra Modi (@narendramodi) September 1, 2025
பின்னர் இரு தலைவர்களும் சீன ஜனாதிபதியை அணுகி, மூவரும் உரையாடியுள்ளனர்.
அவர்கள் விவாதித்த விடயம் தொடர்பில் தற்போது சர்வதேசத்தின் பார்வை திரும்பியுள்ளது.



