அருணாச்சல பிரதேசத்தில் இடங்களின் பெயர்களை மாற்றியமைக்கும் சீனா- நிராகரிக்கும் இந்தியா
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில், தமது எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் இடங்களின் பெயர்களை மாற்றும் சீனாவின் நடவடிக்கையை நிராகரிப்பதாக, இந்தியா தெரிவித்துள்ளது.
அத்துடன், இமயமலைப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்றும் இந்தியா கூறியுள்ளது.
உறவுகளில் விரிசல்
பீய்ஜிங் கடந்த காலங்களிலும் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களை மறுபெயரிட்டுள்ளது, இந்த பிரச்சினை இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் சீன வெளியுறவு அமைச்சக பேச்சாளர் லின் ஜியான் ஒரு ஊடக சந்திப்பில், பீய்ஜிங் அருணாச்சலப் பிரதேசத்தின் சில இடப் பெயர்களை தரப்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.
சீனாவினால் சங்னான் என்று அழைக்கப்படும் அருணாச்சலப் பிரதேசம் தெற்கு திபெத்தின் ஒரு பகுதி என்று பீய்ஜிங் கூறுகிறது, எனினும் புதுடில்லி இதனை பலமுறை நிராகரித்துள்ளது.
இந்தியா-சீனா
அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக இருந்தது, உள்ளது, எப்போதும் இருக்கும் என்ற மறுக்க முடியாத யதார்த்தத்தை மாற்றாது என்று இந்திய வெளியுறவு அமைச்சக பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்தியாவும் சீனாவும் மோசமாக வரையறுக்கப்பட்ட 3,800 கிலோ மீற்றர் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 9 மணி நேரம் முன்

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan
