தைவான் மீது போர் தொடுக்க தயாராகும் சீனா! பரபரப்பை ஏற்படுத்திய ஜின்பிங்கின் பேச்சு
தேவை ஏற்பட்டால் தைவான் மீது ராணுவ பலத்தை பயன்படுத்த தயங்க மாட்டோம் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
தைவான் நாட்டை சீனா சொந்தம் கொண்டாடி வருவதுடன் தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என்று சீனா கூறி வருகிறது.
தைவானை அச்சுறுத்தும் விதமாக அந்நாட்டு வான் எல்லைக்குள் சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்து வருகின்றன. தென்சீன கடல் பகுதியில் சீனா போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே தேவை ஏற்பட்டால் தைவான் மீது ராணுவ பலத்தை பயன்படுத்த தயங்க மாட்டோம் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் தைவான் மீது தாக்குதல் நடத்த ராணுவம் தயாராக உள்ளது என்று சீன ஜனாதிபதி ஜின்பிங் பேசும் குரல்பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த பதிவில், 1.40 லட்சம் ராணுவ வீரர்கள், 953 கப்பல்களை தயார் படுத்துமாறு சீன ஜனாதிபதி ஜின்பிங் பேசி உள்ளார். மேலும் அதில் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர், துணை செயலாளர், கவர்னர், துணை கவர்னர் ஆகியோர் பேசியதும் இடம் பெற்றுள்ளது.
சீன ராணுவம் 1.40 லட்சம் வீரர்கள், 953 கப்பல்கள் 1,653 ஆளில்லாமல் இயங்கும் கருவிகள், 20 விமான நிலையங்கள், 6 கப்பல் கட்டுதல் மற்றும் பழுது நீக்கம் மையங்கள், 14 அவசர கால பரிமாற்ற மையங்கள், உணவு தானிய கிடங்குகள், ஆஸ்பத்திரிகள், ரத்த சேகரிப்பு நிலையங்கள், எரிபொருள் கிடங்குகள், கேஸ் நிரப்பும் நிலையங்களை தயார்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் நடந்து வரும் குவாட் அமைப்பு மாநாட்டில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன், தைவான் மீது படையெடுத்தால் சீனாவுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் களம் இறங்கும் என்று நேற்று எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த குரல் பதிவு வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
பாரிஸ் அவசரக் கூட்டத்தில் பங்கேற்க மறுத்த ட்ரம்ப் - கிரீன்லாந்து விவகாரம் மீதான சர்ச்சை தீவிரம் News Lankasri