சினோபார்ம் தடுப்பூசியில் மேலும் 3 லட்சம் குப்பிகளை வழங்குவதற்கு சீனா உறுதி
கோவிட் தொற்றுக்கு எதிரான சினோபார்ம் தடுப்பூசியில் மேலும் 3 லட்சம் குப்பிகளை வழங்குவதற்கு சீனா உறுதியளித்துள்ளது.
இதனை அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும் ஏன் இன்னும் இலங்கையின் தேசிய மருந்தக ஒழுங்காற்று அதிகாரசபை சினோபார்ம் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கவில்லை என்பது தெரியவரவில்லை.
ஏற்கனவே இலங்கை அரசாங்கம், ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ரா செனேகா மற்றும் ரஸ்யாவின் ஸ்புட்நிக் ஆகிய தடுப்பூசிகளுக்கு ஒப்புதலை வழங்கியுள்ளது.
இந்த நிலையில் சினோர்பார்ம் கோவிட் தடுப்பூசிகளை இலங்கைக்குப் பெற்றுக்கொள்வது தொடர்பில் சீனாவுக்கு தூதுவர் பாலித கோஹன சீனாவின் வெளியுறவு அமைச்சருடன் பேச்சு நடத்தியுள்ளார்.
இதனையடுத்து இலங்கைக்கு 6 லட்சம் தடுப்பூசிக் குப்பிகளை வழங்கச் சீன வெளியுறவு அமைச்சு இணக்கம் வெளியிட்டுள்ளது.
தற்போதைய நிலையில் சீனா சுமார் 56 நாடுகளுக்கு கோவிட் தடுப்பூசியை விநியோகித்து வருகிறது.

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam
