சீன அரசு அறிவித்துள்ள அதிரடி திட்டம்
நடப்பு ஆண்டு ஜனவரி 1ஆம் திகதியிருந்து பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுதோறும் 3,600 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் 50 ஆயிரம்) மானியம் வழங்கப்படும் என சீன அரசு அறிவித்துள்ளது.
இந்த நிதி குழந்தையின் 3 வயது வரை வழங்கப்படும் அதாவது ஒரு குழந்தைக்கு ரூ.1.30 லட்சம் மானியம் வழங்கப்பட உள்ளது.
மக்கள் தொகை
உலகில் அதிகப்படியான மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்த சீனா, மக்கள் தொகையை குறைக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.
இதனால் தற்போது மக்கள் தொகை எண்ணிக்கையில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
140 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையுடன் முதலிடத்தில் இந்தியா உள்ளது.
தற்போது, தான் எதிர்பார்த்ததை விட மக்கள் தொகை வேகமாக சரிந்ததால் சீனா கவலை அடைந்துள்ளது.
புதிய திட்டம்
குழந்தைப் பராமரிப்பு மற்றும் கல்விக்கான அதிகச் செலவு, வேலையின்மை தான், சீனா இளைஞர்கள் குழந்தைகள் பெற்றுக் கொள்வதை தவிர்ப்பதற்கான காரணம் என மக்கள்தொகை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மக்கள் தொகை சரிவதால் கவலை அடைந்துள்ள சீனா அதை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
அதன்படி, தம்பதிகள் குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக, இந்த புதிய திட்டத்தை சீனா அறிவித்துள்ளது.





கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒப்புக்கொண்ட ஆனந்தி, அருவாளை எடுத்த அவரது அப்பா.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam
