இந்தியாவின் அறிவிப்புக்கு மத்தியில் சீன அமைச்சரின் இலங்கை பயணம்!
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி (Wang Yi) இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு இன்று இலங்கை வருகிறார்.
இன்று மாலை 6.30 அளவில் அவர் இலங்கையை வந்தடைவார் என்று எமது கட்டுநாயக்க செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கை வரும் சீன- இலங்கை ராஜதந்திர உறவின் 65 வது நிறைவுகான் நிகழ்வை ஆரம்பித்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் உள்ள சீனத் துாதரகத்தின் தகவல்படி, சீன வெளியுறவு அமைச்சரின் புதுவருடத்துக்கான முதலாவது வெளிநாட்டு பயணமாக இது அமைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதாரம் தளம்பல் நிலையில் இருக்கும்போது, சீன அமைச்சரின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதன்போது இலங்கைக்கான நிவாரணத்திட்டங்களை அவர் அறிவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை இலங்கை நெருக்கடியான நிலையில் இருக்கும்போது இந்தியா, அதற்கு உதவும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.