வடக்கு - கிழக்கு கடற்றொழிலாளர்களுக்கு விரைவில் சீன மண்ணெண்ணெய்: அமைச்சர் டக்ளஸ்

Douglas Devananda Sri Lanka Politician Fishing Northern Province of Sri Lanka Sri Lanka Fisherman
By Kajinthan May 25, 2023 08:14 AM GMT
Report

சீன அரசாங்கத்தினால் கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்ற மண்ணெண்ணெய் விரைவில் வடக்கு, கிழக்கில் உள்ள ஏழு மாவட்டங்களுக்கும் வழங்கப்படும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும், கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இலங்கை முழுவதுமான கடற்றொழில் அமைச்சர் என்ற வகையில் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை நன்கு அறிவேன்.

டக்ளஸ் தேவானந்தா

கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் அன்றாட தொழில் நடவடிக்கை, வீட்டு வசதிகள் என்பவற்றை மேம்படுத்தும் முகமாக சீன அரசாங்கம் சுமார் 1500 மில்லியன் ரூபாவுக்கான செயற்திட்டங்களை ஆரம்பித்துள்ளது.

மண்ணெண்ணெய் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு

அதன் ஆரம்ப நடவடிக்கையாக இலங்கையில் உள்ள 15 கடற்றொழில் மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 27 ஆயிரம் படகு உரிமையாளர்களுக்கு, ஒருவருக்கு 150 லீட்டர் வீதம் மண்ணெண்ணெய் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 75 லீட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்படுவதோடு இரண்டாம் கட்டமாக எஞ்சியவற்றை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மண்ணெண்ணெய்

வட மாகாணத்தில் உள்ள நான்கு கடற்றொழில் மாவட்டங்களுக்கும் கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று கடற்றொழில் மாவட்டங்களுக்கும் விரைவில் மண்ணெண்ணெய் வழங்குவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது.

ஜப்பான் அரசாங்கம், ஆசிய அபிவிருத்தி வங்கி

சீன அரசாங்கத்தின் உதவி திட்டத்தின் கீழ் கடற்தொழிலாளர்களுக்கான வீடு மற்றும் கடற்தொழிலாளர்களுக்கான வலைகள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. 

அது மட்டுமல்லாது எரிபொருள் விலையேற்றத்தைக் கருத்தில் கொண்டு பற்றியில் இயங்கக் கூடிய படகினை சம்பிரதாயபூர்வமாக கடலில் இறக்கியுள்ளோம்.

கடற்தொழிலாளர்கள்

எரிபொருளிலும் பார்க்க பற்றியில் இயங்கும் படகு இலாபகரமானதாகவும், சூழலுக்கு மாசு இல்லாத தொழிநுட்பமாகவும் கருதும் நிலையில் அதனை இலங்கையில் விரிவுபடுத்துவதற்கான செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

ஆகவே ஜப்பான் அரசாங்கம், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இந்திய அரசாங்கமும் கடற்தொழிலாளர்களுக்கு உதவுவதற்கு முன்வந்துள்ள நிலையில் விரைவில் அதற்குரிய செயல்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW  


மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US