சீனாவில் வறட்சி அவசர நிலை பிரகடனம்
அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக, சீனா முதலாவது தேசிய வறட்சி அவசர நிலையை அறிவித்துள்ளது.
இதற்கமைய சீன வானிலை மையம், கடந்த சனிக்கிழமை பல மாகாணங்களுக்கு நான்கு அடுக்கு எச்சரிக்கையான சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
சீனாவில் கன்சு, ஷான்சி, ஹெனான், அன்ஹுய் பகுதிகளில் நேற்று(21) வெப்ப நிலை அதிகரிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கான அறிவிப்பு
இதனையடுத்து ஷான்சி, சிச்சுவான், சோங்கிங், ஹூபே, ஹுனான், அன்ஹுய், ஜியாங்சி மற்றும் ஜெஜியாங் பகுதிகளில் வெப்ப அளவு 40 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மக்களை தேவையில்லாமல் வெளியில் வரவேண்டாம் என்றும் தீ விபத்துகள் வராமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக செயற்படுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
இதேவேளை வெப்பநிலையை எதிர்கொள்ள உள்ளூர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மஞ்சள் எச்சரிக்கை
கடந்த வெள்ளிக்கிழமை சீனாவின் பல மாகாணங்களில் 35 டிகிரி செல்சியசுக்கு அதிகமாக வெப்பநிலை காணப்பட்டுள்ளது.
இதன்போது மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan
