அமெரிக்காவை பின் தள்ளி உலகின் செல்வந்த நாடானது சீனா (Video)
அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி உலகின் செல்வந்த நாடாக சீனா முதலிடத்தை பிடித்துள்ளது.
உலக பொருளாதாரத்தின் நிகர மதிப்புகள் குறித்து சுவிட்ஸர்லாந்தில் உள்ள மெக்கின்சி குளோபல் இன்ஸ்டிட்யூட் (McKinsey Global Institute) நடத்திய ஆய்விலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக 2000ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான தரவுகளை கொண்டு மேற்கொண்ட இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது,
2000ஆம் ஆண்டில் 156 டிரில்லியன் டொலராக இருந்த உலகின் பொருளாதார நிகர மதிப்பு 2020ஆம் ஆண்டில் 514 டிரில்லியன் டொலராக உயர்ந்துள்ளது.
இதில், 3இல் ஒரு பங்கினை சீனா பெற்றுள்ளது. 2000ஆம் ஆண்டில் சீனாவின் நிகர மதிப்பு 7 டிரில்லியன் டொலராக இருந்துள்ளது.
இது தற்போது 120 டிரில்லியன் டொலராக அதிகரித்துள்ளது. இதன்மூலம் உலகின் பணக்கார நாடாக அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு முன்னேறியது.
அமெரிக்கா சுமார் 50 டிரில்லியன் டொலர் நிகர மதிப்புடன் 2ஆவது இடத்தில் உள்ளது. உலகளவில் 68 சதவீத சொத்துக்கள் ரியல் எஸ்டேட் சம்பந்தப்பட்ட துறைகளை சார்ந்து இருக்கிறது. அதேபோல், உள்கட்டமைப்பு சார்ந்த சொத்துக்களின் மதிப்பு 11 சதவீதமாக உள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றை இப்படிக்கு உலகம் விசேட தொகுப்பு,
